கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி... ஐபிஎல் போட்டிகளில் திடீர் மாற்றம்!

 
ஐபிஎல்

 
நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப்ரல் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல்

நடப்பு ஐபிஎல் தொடரின் 19து ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்நிலையில், ஏப்ரல் 6ம் தேதி கொல்கத்தாவில் பொதுநிகழ்ச்சிகள் பல நடைபெற இருப்பதாகவும் இதன்காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர முடியாது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐபிஎல்

 இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கேகேஆர் - எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப்ரல் 8ம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web