பகீர்... மாடு முட்டி பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி.. தொடரும் சோகம்...!!

 
மாடு

சமீபகாலமாக  சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிக அளவில் ஆபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.பல்வேறு பகுதிகளில் மாடுகளை அதன் உரிமையாளர்கள் கண்டுகொள்வதே கிடையாது.  மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.   அந்த வகையில் சென்னையில் திருவல்லிக்கேணி கோவில் அருகில் மாடு முட்டியதில் முதியவர் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்தார். அதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில்   மாடு முட்டி   பேருந்து சக்கரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாடு

 இந்நிலையில்   மேலும் ஒரு உயிரிழப்பு நடந்துள்ளது.  நாகப்பட்டினம் மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் வசித்து வரும்  சபரிராஜன் என்பவர் வழக்கம் போல அப்பகுதி சாலையில் நடந்து சென்றார்.  அப்போது சாலையில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று சபரிராஜனை முட்டி தூக்கி வீசியுள்ளது. அச்சமயம் அங்கு வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சபரிராஜன் சிக்கிக் கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்

மாடு முட்டி உயிரிழந்த   பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துகளும், உயிர்ப் பலிகளும் நடக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web