திருப்பதி லட்டுகளில் மாட்டின் கொழுப்பு.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!

 
திருப்பதி லட்டு

நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசக் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மாநிலத்தின் முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இதனிடையே திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகன் அரசு கலக்கியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியிருந்தார்.

சந்திரபாபு நாயுடு

இது குறித்து அமராவதியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய அவர், "ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு கூட தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டது. நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தினர். தற்போது சுத்தமான நெய் பயன்படுத்தப்படுகிறது. கோவிலில் உள்ள அனைத்து பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டு தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது." இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுத்தது. இதுகுறித்து அக்கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர் சுப்பா ரெட்டி தனது எக்ஸ் இணையதளத்தில், “சந்திரபாபு நாயுடு தனது கருத்துகளால் திருப்பதி கோயிலின் புனிதத்தையும், பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டு

அரசியலுக்காக எந்த ஒரு நபரும் இப்படியொரு குற்றச்சாட்டுகளை கூறமாட்டார்கள் என்பது நிரூபணமாகியுள்ளது, என்று பதிவிட்டிருந்தார்.  திருப்பதி லட்டில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சி கொழுப்பு கலந்திருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது லட்டுவில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, சோயா பீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கொழுப்புகளும் இருந்ததாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web