இந்தியாவில் 2 வயது முதல் கோவேக்சின் தடுப்பூசி!

 
இந்தியாவில் 2 வயது முதல் கோவேக்சின் தடுப்பூசி!

இந்தியாவில் கொரோனா பரவல் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 2 வயது முதல் கோவேக்சின் தடுப்பூசி!

அமெரிக்காவின் பைசர், ஜான்சன் & ஜான்சன், மாடா்னா, சீனாவின் சைனோஃபார்ம் தடுப்பூசிகளை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது.ஆனால் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கவில்லை.

இந்நிலையில் 2 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய சுகாதார வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பரிசோதனை 3 மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது.

இந்தியாவில் 2 வயது முதல் கோவேக்சின் தடுப்பூசி!

இந்த திட்டத்தில் மத்திய அரசு பரிந்துரைத்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருந்துகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்பு வல்லுநர் குழு 3 கட்டங்களாக பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டது.இந்த பரிசோதனை முடிவுகளின் படி 2 முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகளை தொடர்ந்து மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையமும் அனுமதி அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web