காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்த கொடூரம்.. ஆயுதப்படை காவலர் செய்த அட்டூழியம்!

 
 டென்னிஸ் ராஜ்

தூத்துக்குடி நகர் சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகணேஷ். இவர் கடந்த 8ம் தேதி தனது காதலியுடன் முத்துநகர் கடற்கரை பூங்காவிற்கு வந்தார். இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடை போன்ற பகுதியில் மதியம் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இருவரையும் செல்போனில் படம் பிடித்து பாலகணேசனின் காதலியை படம் பிடித்துள்ளார். பின்னர், இருவரையும் மிரட்டிய வாலிபர், இருவரின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், படத்தை வெளியிடக்கூடாது என்றால் பணம் கொடுங்கள் எனக் கூறி வலுக்கட்டாயமாக காதலியின் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார். இதனால் காதல் ஜோடி அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பாலகணேஷ் தனது நண்பர்களுடன் சம்பவம் நடந்த மறுநாள் அதே முத்துநகர் கடற்கரை பகுதிக்கு சென்று அவரிடம் செயினை பறித்தவர் அங்கு உள்ளாரா? தேடினார். அங்கு நின்றிருந்த செயினை பறித்த நபரை பால கணேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிடிக்க முயன்றார். அப்போது அந்த நபர் பைக்கை விட்டுவிட்டு ஓடினார். இதையடுத்து, செயின் பறிப்பவர் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை பாலகணேஷ் எடுத்துச் சென்று, சம்பவம் குறித்து பாலகணேஷ் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், போலீஸார் அந்த இருசக்கர வாகனத்தை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தியதில், அந்த இருசக்கர வாகனம் நெல்லையில் காணாமல் போனது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த டென்னிஸ் ராஜ் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் டென்னிஸ் ராஜ் மணிமுத்தாறு பட்டாலியனில் காவலராக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த டென்னிஸ் ராஜை வடபாகம் போலீசார் இன்று கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் ஆயுதம் தாங்கிய காவலர் இளம் காதல் ஜோடியை மிரட்டி செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web