ஊழல் வழக்கு.. வங்காளதேச முன்னாள் பிரதமருக்கு விடுதலை அளித்து நீதிமன்றம் உத்தரவு!

 
கலீதா ஜியா

வங்காளதேசத்தின் பிரதமராக 1991 முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் கலீதா ஜியா பதவி வகித்தார். அவரது பதவிக்காலத்தில், 'ஜியா பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம் மூலம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பணம் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு கலிதா ஜியா உட்பட 4 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கலிதா ஜியாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டாக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின்னர் அந்த தண்டனை 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இதனிடையே, 'ஜியா அனாதை இல்ல அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனம் மூலம் மோசடி செய்ததாக மற்றொரு வழக்கில் கலீதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 776 நாட்கள் சிறையில் இருந்த கலிதா ஜியா, கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் 2020 மார்ச் 25 அன்று வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதையடுத்து, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து, ஆட்சி மாறியதையடுத்து, முகமது யூனிஸ் தலைமையிலான இடைக்கால அரசு, கலீதா ஜியாவை விடுதலை செய்ய, ஆகஸ்ட், 6ல் உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், கலிதா ஜியா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, கோர்ட் விசாரித்தது. டாக்கா நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கலிதா ஜியாவை ஊழல் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web