ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்திலும் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநில அரசு பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது.

ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களில் சிலருக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. இதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

பள்ளியில் படித்து வரும் மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அக்டோபர் 20 வரை பள்ளியை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதுடன் ,பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web