கழிப்பறையில் தான் சமையல், துணி துவைப்பது எல்லாமே... 18 வயது இளம்பெண்ணின் கனவு!

கழிப்பறையில் தான் சமையல், துணி துவைப்பது எல்லாமே... 18 வயது இளம்பெண்ணின் கனவு! 

சீனாவில் 18 வயதான இளம்பெண் யாங் . இவர் மரச்சாமான்கள் கடையில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது தனிப்பட்ட செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் ஒரு சாதாரண கழிப்பறையை தற்காலிக வீடாக மாற்றி அங்கேயே வாழ்ந்து வருகிறார். மரச்சாமான்கள் கடையில் உள்ள கழிப்பறையிலேயே வாழும் இடத்தை அமைத்து கொண்டார். இதற்காக அவர் தனது முதலாளிக்கு மாதம் வெறும் £5 (சுமார் ரூ545) மட்டுமே வாடகையாக கொடுத்து வருகிறார்.

கழிப்பறையில் தான் சமையல், துணி துவைப்பது எல்லாமே... 18 வயது இளம்பெண்ணின் கனவு! 

யாங், தனது அலுவலக நேரத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட அறையில் கதவில்லாததால் அதில் தங்க வேண்டாம் என தீர்மானித்துள்ளார். இதனால் யாங் கழிப்பறைக்குள் சமையல் அடுப்பை வைத்து சமைப்பதோடு, துணிகளை கழிப்பறையிலேயே துவைத்து கட்டிடத்தின் மேல்தளத்தில் உலர்த்தி விடுகிறார்.

கழிப்பறையில் தான் சமையல், துணி துவைப்பது எல்லாமே... 18 வயது இளம்பெண்ணின் கனவு! 

தனது தினசரி வாழ்வை Douyin-வில்(டிக்‌டாக் போன்ற செயலி) பகிரும் யாங்கை தற்போது 16,000பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். அதிகமான செலவில்லாமல் வாழும் இவர், தனது வருமானத்தின் பெரும்பகுதியை சேமித்து, எதிர்காலத்தில் ஒரு வீடு அல்லது கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web