தொடர் மழையால் வாழை மரங்கள் நாசம்... விவசாயிகள் கடும் வேதனை!

 
வாழை மரம்
தொடர் மழையால் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் கடும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், மக்கள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். அதே சமயம் சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சுற்றியுள்ள இடங்களில் தொடர்ந்து பெய்து வந்த பலத்த மழையால் இடைப்பாடி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள் கிழிந்து கீழே விழுந்தது.  சூறைக்காற்றுக்கு சாலைகளில் புளியமரம், வேப்பமரம், புங்கமரம் முறிந்து விழுந்தது. பல பகுதிகளில் மின்சார கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்தனர்.

சாய்ந்த மின்கம்பம்

அத்துடன் பூலாம்பட்டி, தாதாபுரம் உட்பட  20க்கும் மேற்பட்ட பகுதிகளில் 3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.  தாதாபுரம் ஊராட்சி வட்டக்காடு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையில் 800க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்தது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் சேதமானது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் செம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு, பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. அழகர்நாயக்கன்பட்டியில் பலத்த காற்றுக்கு தெருக்களில் இருந்த 10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததில், வீடுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சேதமடைந்ததால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமமக்கள் அவதி அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் இரவு நேரத்தில் மின்கம்பம் விழுந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பிற்பகல் முதல் தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை வரை அதிகபட்சமாக பெருஞ்சாணியில் 83 மி.மீ மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வந்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 30.2 அடியாக உயர்ந்துள்ளது.

வாழை

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுற்றுலா மையமான களக்காடு தலையணையில் நேற்று அதிகாலை நீர்வரத்து அதிகரித்துள்ளது. தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து தலையணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web