தொடர்ந்து பாலியல் வன்கொடுமை... திரையுலகில் அடுத்த அதிர்ச்சி... மேக்கப் உதவியாளர் கைது!

 
மலையாள  மேக்கப் உதவியாளர்

மலையாள திரையுலகம் பாலியல் சர்ச்சைகளில் சிக்கி கதறிக் கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் விதமாக மேக்கப் உதவியாலர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேக்கப் உதவியாளர் சரத் பல பிரபல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் உதவியாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த அறிக்கையை சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு வெளியிட்டது. அந்த அறிக்கையில், நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், மாஃபியா கும்பல்கள் இதில் ஈடுபடுவதாகவும் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீதான பாலியல் புகார்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.

பாலியல்

இது மலையாள திரையுலகில் பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சங்க உறுப்பினர்கள் சிலர் மீது பாலியல் புகார் எழுந்ததால், மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனிடையே, பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்துள்ள சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு ரகசியமாக சாட்சியம் அளித்து வருகின்றனர்.

கைது
.
சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இதுவரை 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, சிறப்பு புலனாய்வு குழுவிடம், பெண் ஒப்பனை கலைஞர் அளித்த புகாரின் அடிப்படையில், கொச்சி இன்போபார்க் போலீசார், ஒப்பனை உதவியாளர் சருத் சந்திரனை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 3515ஜே, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web