சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

 
சிலம்பு


தெற்கு ரயில்வேயில் வண்டி எண் 20681/20682 தாம்பரம் - செங்கோட்டை -  தாம்பரம் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தேவை அடிப்படையில் இந்த ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்

இந்த கூடுதல் பெட்டிகள் சேவை  27.11.24 முதல் 30.01.25 வரை இணைக்கப்பட உள்ளது.சிலம்பு எக்ஸ்பிரஸ் ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web