குளிர்கால கூட்டத்தொடர்... முதல்நாளே ஒத்தி வைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்த எம்பிக்கள்!
இன்று நவம்பர்25ம் தேதி திங்கட்கிழமை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.
இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில நாட்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற அலுவல்களை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்தக் கோரி மக்களவை உறுப்பினர்கள் கே.சி.வேணுகோபால், மணீஷ் திவாரி, மாணிக்கம் தாகூர் உட்பட்டோர் மீது நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், டெல்லி காற்று மாசுபாடு குறித்து குறுகிய கால விவாதத்தை நடத்தக் கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சித் ரஞ்சன், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து விவாதிக்கக் கோரி மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸும் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!