வாழ்த்துகள்... நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கு பெண் குழந்தை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல். ஜனவரி 2019லிருந்து கே.எல். ராகுல் அதியா ஷெட்டியை காதலித்து வந்தார். 2023ல் இருவரும் திருமனம் செய்து கொண்டனர். இந்தத் திருமணம் கண்டாலாவில் உள்ள நடிகரும் அதியா ஷெட்டியின் தந்தையுமான சுனில் ஷெட்டி பண்ணை வீட்டில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.
இந்நிலையில் கே.எல்.ராகுல் - அதியா ஷெட்டி தம்பதியினருக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இருவருக்கும் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறப்பை முன்னிட்டு கே.எல்.ராகுல் நடப்பு ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!