துத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கல்லூரி மாணவிகள் தூய்மை பணி!
தூத்துக்குடி ம் ஆவட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில்ஏபிசி மகாலட்சுமி கல்லூரி மாணவிகள் தூய்மை பணி மேற்கொண்டனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவிகள் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியினை தூய்மைப்படுத்தினர். மேலும், நோயாளிகளுக்கு சத்தான உணவு மற்றும் உடல் நலம் பேணுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பால் மற்றும் முட்டை போன்ற சத்தான பொருட்களை வழங்கினர்.
தூய்மைபணி மேற்கொண்ட மாணவிகளை பாராட்டி மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணக்குமார் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் தே. சண்முகப்பிரியா மற்றும் ஜெ. வசந்த சேனா, சுகாதார ஆய்வாளர் வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!