பாதி எரிந்த நிலையில் கல்லூரி மாணவி உடல் ... கரூரில் பரபரப்பு... !

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (55). தாயாரம்மாள். தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் சுபா ஹரிணி (19), கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் தகனம் செய்வதற்காக உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர் பெற்றோர். தகவலறிந்து வந்த லாலாப்பேட்டை போலீசார், சுடுகாட்டில் எரிந்த உடலை தண்ணீர் ஊற்றி, உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை குடும்பத்தினர் மறைத்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்லூரி மாணவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க