பகீர் வீடியோ... விமானப் பயணத்தில் ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி... மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

 
கரப்பான்

 சமீபகாலமாக விமானப் பயணங்களில் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் இருந்து நியூயார்க் நோக்கி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பெண் உணவு  குறித்து புகார் தெரிவித்துள்ளார். விமானப் பயணத்தில் வழங்கப்பட்ட ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறது.  அந்தப் பெண்ணின் 2 வயது குழந்தை ஆம்லெட்டை பாதியளவு சாப்பிட்ட பிறகே, அவர் அதில் கரப்பான் பூச்சி இருப்பதை பார்த்துள்ளார்.  குழந்தைக்கு கொடுத்த உணவுக் கெட்டுப்போய் புட் பாய்சனிங் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த தகவலை அவர் தன்னுடைய  X சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 

ஏர் இந்தியா
இந்த எக்ஸ் பதிவை  அமைச்சர் கே. ராம் மோகன் நாயுடுவையும் டேக் செய்துள்ளார். அவருக்கு இந்தப் பிரச்சனையில் உடனடி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளார். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதால், ஏர் இந்தியா விமான சேவைக்கு எதிராக மக்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web