மிளகாய் அபிஷேகம்.. விநோத வழிபாட்டில் ஈடுபட்ட பக்தர்கள்.. எங்கு தெரியுமா?

 
 ஸ்ரீ பாலமுருகன் கோயில்

விழுப்புரம் கோட்டகுப்பம் பகுதியில் ஸ்ரீ பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திரம் திருநாளான 15ம் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பாலமுருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரத்தின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.

ஒரு பக்தர் மிளகாய்ப் பொடியை அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை எடுக்கும் செயல் தொடங்கியது. இதில் வழிபட்ட பக்தர்கள் தங்கள் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் வடை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதேபோல் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் ராட்சத கிரேனின் பின்புறம் வட்டமாக அலகு கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web