வீட்டில் பிரசவம்.. இனி கடுமையான நடவடிக்கை பாயும்.. எச்சரித்த சுகாதாரத்துறை!

 
கர்ப்பிணி பிரசவம்

சென்னை குன்றத்தூர் அருகே மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வாட்ஸ்அப் குரூப் மெசேஜ் மூலம் கணவன் பிரசவம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் (36) என்பவர் தனது மனைவி சுகன்யாவிற்கு நவம்பர் 17ஆம் தேதி திடீரென மூன்றாவது முறையாக பிரசவ வலி ஏற்பட்டதாகவும், பின்னர் வீட்டில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, ​​மனோகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் செய்து, அதுகுறித்த தகவலை தனக்கு இருந்த வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார்.

கர்ப்பிணி

வாட்ஸ்அப் குழுவிற்கு "வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1024 உறுப்பினர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இதுபோன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் வீட்டில் பிரசவம் பார்த்தாலோ, வாட்ஸ்அப்பில் வரும் தகவல் அடிப்படையில் பிரசவம் செய்தாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

மேலும், கிராம சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆரம்ப சுகாதார அலுவலர்கள், கர்ப்பிணிகள் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள் என்பதை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்ப்பிணிகள் பிரசவம் ஆன 3 மாதம் முதல் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், கிராமப்புற செவிலியர்கள் தடுப்பூசி, இரும்புச் சத்து மாத்திரை, ஸ்கேன் போன்றவற்றை முறையாகப் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தை

மேலும்,  கர்ப்பிணிகள் இருக்கும்போது அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். வீட்டில் பிரசவம் செய்வது தாய் மற்றும் குழந்தையின் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குழந்தையின் உயிருக்கு ஆபத்தும் உள்ளது. எனவே, அனைத்து பிரசவங்களும் மருத்துவமனைகளில் நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web