Connect with us

இந்தியா

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது குழந்தை பலி! தொடரும் சோகம்!

Published

on

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டரை வயது ஆண் குழந்தை, கர்நாடகாவில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இந்த குழந்தையை மீட்பதற்கு கடந்த 24 மணி நேரமாக நிகழ்ந்த போராட்டமும், முயற்சியை பலனளிக்காமல் போனது.

கர்நாடகா, ஆலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹசாரே என்பவரின் இரண்டரை வயது ஆண் குழந்தை வீட்டி முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து, திடீரென விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் அருகே உள்ள பகுதிகளில் தேடிப் பார்த்தனர். எவ்வளவு தேடியும் குழந்தை சரத் கிடைக்காததால், குழந்தையை யாரோ கடத்திச் சென்றுவிட்டனர் என்று ஹாருகேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பதிவு செய்து கொண்ட போலீசாரும், குழந்தை சரத்தை தேடி வந்த நிலையில், அவர்களது வீட்டில் இருது 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றுக்குள் 15 அடி ஆழத்தில் குழந்தை சரத் விழுந்து சிக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது . குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்து பெற்றோர் கதறியழுதனர்.

பின்னர், குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசாரும், தீயணைப்பு படையினரும், குழந்தை சரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்து 24 மணி நேரமானதால் தண்ணீர், உணவும் இன்றி மிகவும் சோர்வாக குழந்தை இருந்துள்ளான். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வந்த நிலையில், 24 மணி நேரம் கடந்த நிலையில் ஆக்சிஜன் கிடைக்காமலும், தண்ணீர் கிடைக்காமலும், உடல்நிலை பாதிக்கப்பட்டு குழந்தை சரத் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. குழந்தையின் உடலை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது . ஆழ்துளை கிணற்றை தோண்டியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தியா3 mins ago

ஷாரூக்கான் படத்திலிருந்து நயன்தாரா விலகுகிறாரா?

சினிமா19 mins ago

அண்ணாத்த ட்ரெய்லர் வெளியீடு! உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

இந்தியா48 mins ago

டிசம்பருக்குள் அனைவரும் தடுப்பூசி! மத்திய அரசு அதிரடி உத்தரவு!

இந்தியா53 mins ago

டிஜிட்டல் புரட்சி! தீபாவளி சரவெடி! ஜியோபோன் நெக்ஸ்ட்!

இந்தியா58 mins ago

இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயார் !

உலகம்2 hours ago

செம தில்லு ‘தல’!! ஆபத்தான மலைப்பாறையின் நுனியில் மாஸான போஸ் கொடுத்த அஜித்!! வைரலாகும் போட்டோ!

செய்திகள்2 hours ago

உஷார்!! நவம்பர் மாதத்தில் 17 நாட்கள் வங்கிகளுக்கு முழு விவரம்!

கன்னியாகுமரி7 hours ago

நவம்பர் 1ம் தேதி விடுமுறை! கலெக்டர் அதிரடி!

செய்திகள்7 hours ago

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

செய்திகள்7 hours ago

அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

செய்திகள்5 days ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

கள்ளக்குறிச்சி3 weeks ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

கன்னியாகுமரி1 week ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

செய்திகள்3 weeks ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சிவகங்கை1 day ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

சினிமா3 weeks ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்4 days ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா3 weeks ago

உஷார்! இதை அப்டேட் செய்யல்லனா ரேசன்கார்டுகள் முடக்கப்படும்!

செய்திகள்1 day ago

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்! சுகாதாரத் துறை செயலர்!

இந்தியா2 weeks ago

திடீர் உத்தரவு!! கதறும் ஐடி ஊழியர்கள்!! திசை மாறிய வாழ்க்கை முறை!!

Trending