மாஸ் வீடியோ... ஓட்டுனரே இல்லாத தானியங்கி காரில் முதல்வர் ஸ்டாலின் பயணம்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 27ம் தேதி அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ நகரில் ஆகஸ்ட் 29 முதல் முதலீட்டாளர்கள் மாநாடு உட்பட பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில்… pic.twitter.com/ezjX5uqrax
— M.K.Stalin (@mkstalin) September 2, 2024
அதனைத் தொடர்ந்து, சிகாகோ நகருக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார். 17 நாள்கள் பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 12ம் தேதி முதல்வர் சென்னை திரும்புகிறார். இந்நிலையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத தானியங்கி காரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் “இன்று உலகத்தின் பல்வேறு பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலான எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!