சைவ உணவில் சிக்கன்... ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி!

 
சிக்கன்

எந்நேரமும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பயணங்களிலும் வேடிக்கைப் பார்க்கவோ, அருகில் இருப்பவர்களிடம் பேசுவதற்கோ நேரமில்லாமல் செல்போனிலோ, லேப்-டாப்பிலோ எதோவொரு வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம். எதுவுமில்லை என்றாலும் பாடலோ, படங்களையோ, ஷார்ட்ஸ், ரீல்ஸ்களையோ நேரத்தை வீணாக்காமல் செய்து கொண்டிருக்கிறோம்.

சமைக்கும் பழக்கம் பெரும்பாலான வீடுகளில் அறவே ஒழிந்து விட்டது. முன்பாவது நடந்து ஹோட்டலுக்குச் சென்றுக் கொண்டிருந்தவர்கள் இப்போது ஸ்விக்கி, சொமேட்டோ என ஆன்லைன் மூலமாக பக்கத்து தெரு உணவகத்திலிருந்தும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்வது வசதியான விருப்பமாகவும், நேரத்தை மிச்சப்படுத்த உதவுவதாகவும் இருந்தாலும் உணவின் தரம், தாமதமான டெலிவரி, தவறான பொருட்கள் விநியோகம் போன்ற சிக்கல்களும் இதில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ட்விட்டரில் ஹிமான்சி எனும் பயனர் வெளியிட்டுள்ள பதிவு அதிர்ச்சியளிக்கிறது. அதில், தான் சொமேட்டோ வழியாக ஆர்டர் செய்த சைவ உணவில் சிக்கன் இருப்பதாக கூறி புகார் தெரிவித்திருந்தார். ஈட்ஃபிட் என்ற உணவகத்தில் பாலக் பன்னீர், சோயா மட்டர் மற்றும் மில்லட் புலாவை சொமேட்டோ வழியாக ஆர்டர் செய்திருந்தேன். வெஜிட்டேரியன் உணவை மட்டுமே தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்த எனக்கு பாலக் பன்னீருக்கு பதிலாக சிக்கன் பன்னீரை அனுப்பி வைத்துள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பதிவிட்டு தனக்கு அளிக்கப்பட்டிருந்த உணவின் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் சொமேட்டோ இதனை கவனத்தில் கொண்டு, உணவை மாற்றி அனுப்பியது குறித்தும், மன்னிப்பும் கேட்டு பதிவிட்டுள்ளனர். மேலும், உணவு விநியோக தளம், இந்த சிக்கலைச் சரிபார்த்து, விரைவில் தீர்வு அளிக்கப்படும் என்று ஹிமான்சிக்கு உறுதியளித்தது. இச்சம்பவம் உங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அவற்றை ஒருபோதும் அவமதிக்க மாட்டோம். இதை சரிபார்க்க எங்களுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுங்கள். விரைவில் இதற்கான தீர்வுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறோம் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தனர்.

அடுத்த சில நிமிடங்களில் இது குறித்து சம்பந்தப்பட்ட உணவகத்தினரும் ஹிமான்சியிடம் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்திற்கு நங்கள் மிகவும் வருந்துகிறோம். இப்பிரச்னையை உடனடியாக சரி செய்கிறோம். தயவு செய்து உங்கள் ஆர்டரையும், தொடர்பு விவரங்களையும் அனுப்பவும் என்று குறிப்பிட்டிருந்தது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web