சென்னையில் செப்.11,14, 15 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு அனுமதி.. பாதுகாப்பு பணியில் 16,500 போலீசார்!
சென்னையில் இந்து அமைப்புக்கள் சார்பில் 1,500 பெரிய விநாயகர் சிலைகள் நிறுவப்பட உள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் வரும் செப்டம்பர் 11, 14 மற்றும் 15 ஆகிய 3 தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் 15ம் தேதி அன்று பிரமாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பாதுகாப்புப் பணியில் 16,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!