திணறியது சென்னை... ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள்!
அதன்படி, நேற்று முன் தினம் மாலை முதலே சிறப்பு பேருந்துகளின் இயக்கம் துவங்கியது. இதனால், கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் வழக்கத்தை விட அதிகளவில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் இடம் பிடிக்க பொதுமக்கள் முண்டியடித்தனர்.
தீபாவளிக்கு ஏற்கனவே அறிவித்தபடி, சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை துவங்கி உள்ளோம். சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் 2,092 பேருந்துகளோடு 700 சிறப்பு பேருந்துகளை இயக்க தயாராக இருந்தோம். நேற்று மாலை முதல் பயணியர் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணியர் வருகைக்கு ஏற்ப பேருந்துகளைக் கூடுதலாக இயக்க உள்ளோம் என்று போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுவரையில் 1.31 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் 4.29 லட்சம் இருக்கைகள் காலியாக உள்ளன. மொத்தமுள்ள இருக்கைகளில் இதுவரை 30 சதவீதம் மட்டுமே முன்பதிவு முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் ஷாப்பிங் மால்களிலும் மார்க்கெட் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!