‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் போடுங்கள்’.. இஸ்லாமிய நபர்களை மிரட்டிய பெண்.. மன்னிப்பு கோரி வீடியோ வெளியீடு!
இந்தியாவில் சமீப காலமாக ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் பற்றிய செய்திகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட வந்தபோது அந்த அணிக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷம் எழுப்பப்பட்டது. அதன்பிறகு, ஜம்மு காஷ்மீரில் பள்ளி வகுப்பறையில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதியதற்காக மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் இதே கோஷத்துடன் தேவாலயம் ஒன்றில் காவி கொடி ஏற்றப்பட்டது. கர்நாடகாவில் முஸ்லீம் பெண்ணைச் சுற்றி இதே கோஷம் எழுப்பப்பட்டது.
Idea of BJP’s India explained in this 2-3 minutes video:
— Ruhullah Mehdi (@RuhullahMehdi) November 25, 2024
- Kashmir is not part of India.
Too much for “integration of Kashmir” after the abrogation of 370.
- The criteria for holding Indian citizenship is chanting a slogan of a particular religion.
If there is some India… pic.twitter.com/6QNWq6bT0u
இதையடுத்து, மகாராஷ்டிராவில் இதே கோஷத்துடன் ஒரு மசூதி இடிக்கப்பட்டது. என்ன கொடுமை என்றால், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் விவாதப் பொருளாக மாறினார்கள். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பெண் ஒருவர் சால்வை விற்க வந்த இருவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்ல வைத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலம் காங்க்ரா அருகே உள்ள கந்தர் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் சுஷ்மா தேவி. தொகுதி மேம்பாட்டுக் குழு உறுப்பினராக உள்ளார். இந்த பகுதியில் காஷ்மீரிகள் சால்வை வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் குப்வாரா பகுதியை சேர்ந்த அலி முகமது மிர் என்பவர் தனது மகன் பிர்தௌஸ் அகமது மிர் என்பவருடன் சால்வை வியாபாரம் செய்து வந்தார்.
அப்போது சுஷ்மாதேவி இருவரையும் அழைத்து மிரட்டினார். “நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம். நாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லுங்கள். அதற்கு அவர்கள், “என்னை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்கிறீர்களா? ஆனால், நான் வேறு மதத்தைச் சேர்ந்தவர். யாராவது உங்களிடம் குர்ஆனை ஓதச் சொன்னால், அதைச் செய்வீர்களா?'' என்று கேட்டார். இதையடுத்து அவர்களை மிரட்டிய சுஷ்மா தேவி, “நீங்கள் மீண்டும் இந்த பகுதிக்கு வியாபாரம் செய்ய வரக்கூடாது. யாரும் உங்களிடமிருந்து வாங்க மாட்டார்கள். பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் தனது இணையதளத்தில் வெளியிட்டார். இதனால் இணையத்தில் வைரலாக பரவியது.
हिमाचल: कश्मीरी मुस्लिम लोगों से सामान ना खरीदने कि बात करने वाली महिला ने पुलिस द्वारा मामले कि संज्ञान लेने के बाद मांगी माफ़ी।
— Ashraf Hussain (@AshrafFem) November 26, 2024
pic.twitter.com/DICuVApifm
இதையடுத்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இருவரும் ஆலம்பூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சுஷ்மா தேவியிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சுஷ்மா தேவி வீடியோ ஒன்றை வெளியிட்டார். “நான் என் தவறை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் சில பெண்கள் தனியாக வாழ்கிறோம். வெளியாட்களைக் கண்டால் பயமாக இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னேன்,'' என்றார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் அவர் மீதான புகாரை வாபஸ் பெற்றனர். முன்னதாக, இந்த வீடியோ வைரலானதை அடுத்து, பல ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதிகள் அந்த பெண்ணை கைது செய்யுமாறு ஹிமாச்சல பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!