ஒரே ஒரு முஸ்லீம், கிறிஸ்தவர், சீக்கியர் ஒருவர் கூட இல்லாத மத்திய அமைச்சரவை!

 
மோடி அமைச்சரவை

 நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 3 வதுமுறையாக பிரதமராக மோடி பொறுப்பெற்றுக் கொண்டார். அவருடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்த அமைச்சரவையை பொறுத்தவரை இந்திய வரலாற்றில் முதல்முறையாக முஸ்லிம் இல்லாத மத்திய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது. இந்த முறை மத்திய அமைச்சரவையில் மாநிலங்கள், சாதிகள் வாரியாக  பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 20 கோடி முஸ்லீம்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஒரு பிரதிநிதி கூட மத்திய  அமைச்சரவையில் இல்லை என்பது சர்ச்சையாகியுள்ளது. மோடி தலைமையிலான கடந்த மத்திய அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. 2019ல்  மோடி தலைமையிலான அமைச்சரவையில், சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பாஜகவின் முக்தார் அப்பாஸ் நக்வி இருந்தார்.  2022ல் அவருக்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவடைந்தததை அடுத்து, அவர் மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.  

அமைச்சரவை
2014 ல்  முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்ற போது பாஜகவின் நஜ்மா ஹெப்துல்லா சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக பதவியேற்றிருந்தார். அந்த சமயத்திலும் அவர்  ஒருவருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருந்தது.
2004 மற்றும் 2009 களில்  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முறையே 4 மற்றும் 5 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வாஜ்பாயி  அமைச்சரவையில் 1999ல் 2 இஸ்லாமியர்கள்  மத்திய அமைச்சராகவும், 1998 ல் ஒருவர் மத்திய இணையமைச்சராகவும் இருந்துள்ளனர்.

அமைச்சரவை
மக்களவைத் தேர்தல் 2024ல்  24 முஸ்லிம் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 21 பேர் 'இந்தியா' கூட்டணியை சேர்ந்தவர்கள். மற்றவர்களில் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி, ஜம்மு - காஷ்மீர் சுயேச்சை எம்பி அப்துல் ரஷித் ஷேக் மற்றும் லடாக்கின் முகமது ஹனிஃபா.  தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  293 பேரில் ஒருவர் கூட முஸ்லிம், கிறிஸ்தவர் மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல.  மாநிலங்களவை உறுப்பினர்களாக  கிறிஸ்துவ மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவிகிதம் கொண்ட முஸ்லிம் மக்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்காதது இதுவே முதல்முறை  என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web