ரீல்ஸ் மோகத்தால் தண்ணீரில் விழுந்த செல்போன்.. கதறி அழும் இளைஞர் வீடியோ வைரல்!
இணையத்தில் புகழ் பெறுவதற்காக, இளைஞர்கள் பல்வேறு வீடியோக்கள் மற்றும் சாகசங்களைச் செய்து அவற்றை பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோக்களில் சில நகைச்சுவையானவை. இந்த வீடியோக்களில் சில ஆபத்தானவை. இதுபோன்ற ஒரு நிகழ்வில், ரீல்ஸில் ஒரு ஏரிக்கு இடத்திற்கு அருகில் நின்று வீடியோ படம்பிடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன் தனது செல்போனை இழந்து தவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
That video would have went viral pic.twitter.com/v9nwdExQ53
— Tried Wrong (@TriedWrong) December 21, 2024
அதில், ஒரு இளைஞன் தனது செல்போனை ஒரு நீர்நிலையின் ஸ்டாண்டில் வைத்துவிட்டு சிறிது தூரம் சென்று நடனமாடுகிறார். அந்த நேரத்தில், அவன் செல்போன் ஸ்டாண்டை கவனிக்கவில்லை. ஸ்டாண்ட் சரிந்து செல்போனுடன் தண்ணீரில் விழுகிறது. மேலும், அவன் நடனமாடும் போது, அவன் காலில் இருந்த காலணிகளும் தண்ணீரில் விழுகின்றன.
சிறிது நேரம் கழித்துதான் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டது என்பதை அவன் உணர்கிறான், இதனால் அவன் அதிர்ச்சியடைகிறான். பின்னர் செல்போன் வேலை செய்யாததை கண்டு அழத்தொடங்குகிறான். இந்த நகைச்சுவை கலந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!