கொண்டாட்டம்... புது நிதியாண்டு துவக்கம்.... இன்று முதல் தங்கம் உட்பட இவை எல்லாம் விலை குறையும்?!

இன்று புது நிதியாண்டு துவங்கி இருக்கும் நிலையில், இன்று முதல் தங்கம் உட்பட இந்த பொருட்களின் விலை எல்லாம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த போது, பட்ஜெட்டில் பல்வேறு இறக்குமதி பொருள்களுக்கான வரிகளை குறைத்து அறிவித்திருந்தார். இந்த புதிய வழிமுறைகளானது இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இதனையடுத்து இந்தியாவில் எந்தெந்த பொருட்களுக்கான வேலைகள் குறைய வாய்ப்புள்ளது என்பது குறித்த பார்க்கலாம் வாங்க.
மத்திய பட்ஜெட்டில் செல்போன் பேட்டரிகள் மற்றும் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் திறந்த செல்கள் இவைகளின் இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. எனவே மின்னணு சாதனங்கள், மொபைல் போன், எல்இடி, எல்சிடி வகை தொலைக்காட்சிகளின் விலைகள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கமாக எலெக்ட்ரிக் பேட்டரிகளின் இறக்குமதி வரியானது குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையும். அதுமட்டுமின்றி மருத்துவ உபகரணங்கள், புற்றுநோய் உட்பட பல மருந்து பொருட்கள், தோள் மற்றும் கப்பல் கட்டுமானத்திற்கு பயன்படும் மூலப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் ஆடைகளுக்கான விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!