இன்று +2 பொதுத்தேர்வு எழுத முடியாதவர்களுக்கு சிபிஎஸ்இ மேலும் ஒரு வாய்ப்பு!

அவ்வாறு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் 'நாட்டின் பல பகுதிகளில் ஹோலி பண்டிகை மார்ச் 14 ம் தேதி நேற்று கொண்டாடப்பட்டது.
சில பகுதிகளில் இந்த கொண்டாட்டங்கள் இன்று மார்ச் 15ம் தேதி சனிக்கிழமை வரை நீடிக்கவே வாய்ப்பு உள்ளதாக சி.பி.எஸ்.இ.க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்ட அட்டவணைப்படி தேர்வை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதே நேரம் 15ம் தேதி தேர்வு எழுத முடியாத மாணவர்கள் பின்னொரு தேதியில் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என கூறியுள்ளார். தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான வாரியத்தின் கொள்கையின்படி, சிறப்புத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் சேர்ந்து இந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!