நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு?!
அல்லு அர்ஜூன் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.டிசம்பர் 4ம் தேதி இரவு 9.40 மணிக்கு புஷ்பா2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் சந்தியா திரையரங்கில் கூட்ட நெரிசலில் சிக்கிய பெண் பரிதாபமாக பலியானார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா 2 இன்று வியாழக்கிழமை டிசம்பர் 5ம் தேதி காலை வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற போது தில்சுக்நகரைச் சேர்ந்த 35 வயதான ரேவதி என்ற பெண் பலியானார். இந்நிலையில், அவரது 13 வயது மகன் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அதிக அளவிலான கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதால் ஹைதராபாத் சந்தியா தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் காவல்துறையினர் , "தியேட்டருக்கு வரப்போவதாக தியேட்டர் நிர்வாகம் அல்லது நடிகர்கள் குழு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை" எனத் தெரிவித்துள்ளனர். நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் வருவதை தியேட்டர் நிர்வாகம் அறிந்திருந்தும், அவர்களுக்கென்று தனி வழியோ, வெளியேற வழியோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவரின் குடும்பத்தினர் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திரையரங்கிற்குள் மரணம் மற்றும் பிறருக்கு காயம் ஏற்படுத்தும் குழப்பமான சூழ்நிலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!