அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு... தொண்டர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சேலத்தில் வசித்து வரும் பால் வியாபாரியான முனுசாமியிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
அதாவது ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுத்திருப்பதாக கூறி அவர் பணமோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 65 லட்சம் வரை பண மோசடி செய்திருக்கலாம் எனத் தெரிகிறது. இதனடிப்படையில் சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மகள் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஏற்கனவே சமீபத்தில் எஸ்.பி வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது மேலும் முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது அதிமுக கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!