சரக்கு விமானம் வீட்டின் மீது மோதி ஒருவர் பலி... பகீர் வீடியோ!

 
விமானம்

 ஜெர்மனியில்  லிதுவேனியா தலைநகர் வில்னியஸ் நோக்கி டிஎச்எல் சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம்   இன்று அதிகாலையில் விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த போது  தரையிறங்குவதற்கு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் விபத்தில் சிக்கியது.  இஸ்ரேல் தூதர் தகவல் கட்டுப்பாட்டை இழந்து, தரையை நோக்கி பாய்ந்த விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து தீப்பற்றியது. இதனால் வீடு மிகக் கடுமையாக சேதமடைந்தது.

விமான பாகங்கள் வீட்டை சுற்றிலும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் வீட்டிலிருந்த 2  பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டனர்.  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  வில்னியஸ் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு  முன்னதாக, விமானம் விபத்துக்குள்ளானதாக காவல்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

விமானம்

இன்றைய உள்ளூர்  நேரப்படி அதிகாலை 5:30 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை என்றாலும் விமான நிலைய பகுதியில் உறைபனியுடன் கூடிய வானிலை நிலவியதால்  மணிக்கு 30 கிமீ வேகத்தில் காற்று வீசியதாலோ ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web