அதிகாரப்பூர்வ அறிவிப்பு... களமிறங்குகிறார் ‘தல’ அஜித்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா தகவல்!

 
அஜித்

அஜித் தன் வசம் தற்போது 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' ஆகிய படங்களை வைத்துள்ளார். இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம் ‘விடாமுயற்சி’. 'குட் பேட் அக்லி' படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். அஜீத்துக்கு சினிமா தவிர ஆட்டோமொபைல்களிலும் ஆர்வம் அதிகம். கார் பந்தயத்தில் தீராத நாட்டம் கொண்ட அஜித், இதற்கு முன் ஃபார்முலா பந்தயங்களிலும் பங்கேற்றுள்ளார்.


2025 ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் போட்டியிடுவார் என இந்திய மோட்டார்ஸ்போர்ட் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனும் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித் விரைவில் கார் பந்தயத்தில் கலந்து கொள்வார் என அறிவித்துள்ளார்.

இது குறித்து அஜித் எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "'AK' துபாயில் ஃபெராரி 488 EVO சேலஞ்ச் செஸ்ட் செய்து வரும் நிலையில், வரவிருக்கும் ஐரோப்பிய பந்தய சீசனுக்கு தயாராகி வருகிறார். மேலும் புதிய ஹெல்மெட் பெயிண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் உற்சாகம். 'அட்ரினலின் எரிபொருள்' சவாரிக்கு தயார்!" அவர் குறிப்பிட்டுள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web