கார் மோதி கோர விபத்து.. ஒருவர் தூக்கிவீசப்பட்டு பலி... இருவர் கவலைக்கிடம்...!!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கோடாங்கிபட்டியில் வசித்து வருபவர் ரவி. இவர் தனது மனைவி ராஜம்மாள், உறவினர் அழகம்மாள் 3 பேரும் தங்களது கிராமத்தில் இருந்து சிவகங்கைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் உருளி விலக்கு பகுதியில் மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயற்சித்தனர்.
அப்போது, ஆறுமுகம் என்பவர் ஓட்டிவந்த இன்னோவா கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் படுகாயம் அடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ரவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த அவரது மனைவி ராஜம்மாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவரது உறவினர் அழகம்மாள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விபத்து குறித்து சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் உயிரிழந்த ரவியின் உடலுக்கு முதலுதவி செய்ய முயற்சித்தனர். இச்சம்பவம் காண்பவர்கள் கண்ணில் நீரை வரவழைத்தது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!