உள்ளாட்சி தேர்தல்! இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி!!

 
உள்ளாட்சி தேர்தல்! இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி!!

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று, சனிக்கிழமைகளிலும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதிகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு குறித்து சென்னையில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்! இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி!!

அதில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார். இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறும். அக்டோபர் 12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்! இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி!!


செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

செப்டம்பர் 15 முதல் 22 வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம். செப்டம்பர் 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப்டம்பர் 25ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தல்! இன்றும் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். 9 மாவட்டங்களில் 27,000 பதவிகளுக்கு 14,573 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால் வாக்குச்சீட்டு முறையில் மட்டுமே தேர்தல் நடத்தப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 வகையான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். உள்ளாட்சி தேர்தலை காரணமாக பாதுகாப்பு பணியில் 40000 காவலர்கள் ஈடுபடுத்தப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேலும், வேட்புமனுவை தாக்கல் செய்ய வேட்பாளர் மட்டுமே தனியாக அனுமதிக்கப்படுவார் என்றும், வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கபட்டால் அவரை முன்மொழிபவர் மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web