சொத்துக்களை வாங்க விற்க.. இனி இ-கட்டா கட்டாயம்.. மாநில அரசு திடீர் உத்தரவு!
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா முதலமைச்சராக உள்ளார். இவரது அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக கிருஷ்ணபைர கவுடா பணியாற்றி வருகிறார். கர்நாடகாவை பொறுத்த வரையில் பல இடங்களில் பத்திரப் பதிவு தொடர்பான மோசடி, முறைகேடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் வெளிமாநிலங்களில் வசிப்பதால், சிலர் முறைகேடாக நிலத்தை அபகரித்து வருகின்றனர்.
அதாவது நிலத்தின் உரிமையாளருக்குத் தெரியாமல் வேறு ஒருவருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதை தடுக்க வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ணபைர கவுடா நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் கர்நாடகாவில் சொத்து பதிவுக்கு இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் கிருஷ்ணபைர கவுடா கூறியதாவது: கர்நாடகாவில் சொத்து பதிவுக்கு இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை செப்டம்பர் 30ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.சொத்து பதிவின் போது நடக்கும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை சில மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சித்ரதுர்கா, ராய்ச்சூர், பாகல்கோட்டை, சாமராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பத்திரப் பதிவு செய்ய இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் உள்ள இ-ஸ்வத்து கிராமங்கள் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது. இ-ஆஸ்தி மூலம் நகரங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே பெங்களூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் கடந்த 30ம் தேதி முதல் இ-கட்டா கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, சொத்துக்களை விற்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இருவருக்கும் இ-கட்டா கட்டாயம். இ ஸ்வது மற்றும் இ ஆஸ்தி இரண்டும் மாநில பதிவு செயல்முறைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. எனவே நாளை முதல் E Khata இல்லாமல் எந்த சொத்துக்களையும் பதிவு செய்ய முடியாது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!