விபத்தில் உயிரிழந்த மாவட்ட நிர்வாகிகள் குடும்பங்களை கட்சி கவனித்துக் கொள்ளும்... புஸ்ஸி ஆனந்த் உறுதி!

 
புஸ்ஸி


 விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் அரசியல் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 13 லட்சம் பேர் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.  திருச்சியில் இருந்து த.வெ.க மாநாட்டுக்கு சென்ற கார் உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் கார் மோதியது. இந்த விபத்தில்   சீனிவாசன், தவெக நிர்வாகி கலைக்கோவன் இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இவ்வாறு நேற்று தவெக மாநாட்டு புறப்பட்டவர்கள், கலந்து கொண்டவர்களில் 4 பேர் உயிரிழந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் உத்தரவின் பேரில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சித் தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி  செலுத்தினர். அவர்களது உறவினர்கள், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
அஞ்சலி செலுத்திய பின், அக்கட்சி பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  “தவெக தலைவர் விஜய் சொன்னதால்தான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினேன். நிர்வாகிகள் உயிரிழப்பு கட்சிக்கு மிகப்பெரிய இழப்பு உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பங்களை கட்சி பார்த்துக்கொள்ளும்” என உறுதி அளித்துள்ளார்.


சாலை விபத்தில் உயிரிழந்த தவெக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசனும் கலையும் ரசிகர் மன்றத்திற்காக நிறைய உழைத்து இருக்கிறார்கள், செலவு செய்திருக்கிறார்கள். இழப்பீடு கேக்கல.. நேர்ல வரணும்னு சொல்லல.. ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? கட்சி தொண்டனின் இறப்புக்கு விஜய் இரங்கல் தெரிவிக்காதது ஏன்? ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? என உயிரிழந்த தவெக திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன் மற்றும் கலையின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web