பேருந்து கவிழ்ந்து கோர விபத்து... 7 பேர் பலி; 37 பேர் படுகாயம்... அமெரிக்காவில் சோகம்!

 
அமெரிக்கா பேருந்து விபத்து

அமெரிக்காவில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்திற்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 37 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தின் விக்ஸ்பர்க் நகருக்கு கிழக்கு பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றியபடி சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 41 பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்களுடன் அட்லாண்டாவில் இருந்து டல்லாஸ் நோக்கி சென்ற அந்த வர்த்தக பேருந்து, வாரன் கவுன்டி பகுதியில் பொவினா அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

Mississippi

இந்த விபத்தில் சகோதர சகோதரிகளான 6 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி உள்ளிட்ட 7 பேர் பலியானார்கள். 37 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் விக்ஸ்பர்க் மற்றும் ஜாக்சன் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mississippi

இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதில், இந்த பேருந்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web