பேருந்து -லாரி மோதி கோர விபத்து... 3 பேர் பலி;18 பேர் காயம்!

 
விபத்து

சேலம் மாவட்டம் ராசிபுரம் அருகே  தனியார் சொகுது பேருந்த டயர் வெடித்து விபத்திற்குள்ளானதில் ஒட்டுநர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயமடைந்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராசிபுரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

ஆம்புலன்ஸ்

இந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், மெட்டாலா அருகேயுள்ள கோரைக்கோடு பாலம் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் முன்புற டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி எதிரே வந்துக் கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. 
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்த ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், மங்களபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

உத்தரபிரதேச போலீஸ்
இந்த விபத்தில் ராசிபுரம் அருகேயுள்ள முருங்கப்பட்டி பகுதியை சேர்ந்த பேருந்து ஒட்டுநர் ரவி (56), பெயர் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க லாரியின் ஒட்டுநர், பேருந்தில் பயணம் செய்த ஆர்.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த அலமேலு (57) என்ற பெண் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்  மேல் சிகிச்சைக்காக சேலம் மோகன்குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web