50 பயணிகளுடன் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... திக் திக் நிமிடங்கள்!
தமிழகத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து அக்டோபர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை, வாழப்பாடி வழியாக, சேலம் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்தப் பேருந்து வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, வெள்ளாளகுண்டம் இணைப்பு சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பேருந்து, சேலம் சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பலமாக மோதியது. இந்த விபத்தில் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து நடத்துநர் மூவரும் படுகாயம் அடைந்தனர். ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தியதால், 50க்கும் மேற்பட்ட பயணிகளும் எந்தக் காயமுமின்றி உயிர்தப்பினர்.
இந்த விபத்து காரணமாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!