பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியல்.. முதலிடம் பிடித்து பும்ரா சாதனை..!
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதலிடம் பிடித்தது இதுவே முதல்முறை. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா இரண்டு இன்னிங்சிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் இந்த பெருமையைப் பெற்றார்.
முன்னதாக, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்துக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்சில் விக்கெட் எடுக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அவரது புள்ளிகள் சரிந்தன.
அதன்பின் அஸ்வின் மூன்றாவது இடத்துக்கும், பும்ரா முதலிடத்துக்கும் சென்றார். இதே பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அபாரமாக பந்துவீசி வரும் பும்ரா, கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150+ விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் பும்ரா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க