பட்ஜெட் 2024: விலை குறையும் பொருட்கள்... முழு தகவல்கள்!
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த பட்ஜெட்டில் தமிழகம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பட்ஜெட் காரணமாக வரி குறைப்பால் தோல் பொருட்கள் விலை குறைகிறது.தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும்
இ-காமர்ஸ் ஆப்பரேட்டர்களுக்கு TDS 1 சதவிகிதத்திலிருந்து 0.1 சதவிகிதமாகக் குறைப்பு.
தங்கம், வெள்ளி நகைகளுக்கு சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுகிறது. பிளாட்டினம் நகைகளுக்கு சுங்க வரி 6.4% குறைக்கப்படுகிறது. இதனால் தங்கம், வெள்ளி விலை குறையலாம்.
செல்போன்களின் விலை குறைகிறது. செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவிகிதம் குறைக்கப்படும்.
நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 4.9 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இடைக்கால பட்ஜெட்டில் 5.1 சதவிகிதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது 0.2 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு .
3 வகை புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு.
25 தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு.விண்வெளி பாதுகாப்பு தொலைத்தொடருகளில் 25 முக்கிய தாது பொருட்களுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு
சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு
மருத்துவ உபகரணங்களுக்கு சுங்க வரி குறைப்பு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு
பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்கள் வாங்கும் சொத்துகளூக்குக் கூடுதல் கட்டணக் குறைப்பு திட்டங்களும் வகுக்கப்படும்.
சிறு குறு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்க கடன் வழங்கப்படும்
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைப்பு
தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000-ஆக அதிகரிப்பு.
ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கான 'ஏஞ்சல் வரி' ரத்து.
அன்னிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 35%ஆக குறைக்கப்படும்
மேலும் பெண்கள் பெயரில் நிலம் பதிவு செய்யப்படும் போது முத்திரைத் தீர்வையை குறைக்க பரீசீலனை செய்யப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா