வேற்று சாதி இளைஞரை காதலித்த தங்கையை இரும்புக் கம்பியால் அடித்து ஆணவக்கொலை செய்த அண்ணன் !

 
வித்யா


தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா . இவர் மார்ச் 30ம் தேதி  தன்னுடைய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென தலையில் பீரோ விழுந்துள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.  போலீசாருக்கு தகவல் எதுவும் கொடுக்காமல் உறவினர்கள் அந்த பெண்ணை அடக்கம் செய்து விட்டனர்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் வித்யா வெண்மணி என்ற இளைஞரை  காதலித்து வந்தார். அந்த இளைஞர் வித்யாவை பெண் கேட்டு சென்ற நிலையில் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.  வித்தியாவின் பெற்றோர் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
இது குறித்து அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி தகராறு நடைபெற்ற  நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் அவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் பிரச்சனை நடந்து கொண்டிருந்த நேரத்தில் காதலி பலியானதால் அவருடைய காதலனுக்கு சந்தேகம் ஏற்பட்டு தற்போது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

போலீஸ்


இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட வித்யாவின் அண்ணன் சரவணன் தான் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. அதன்படி   வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் கோபத்தில் தன்னுடைய தங்கையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டார்.  பின்னர் தலையில் பீரோ விழுந்ததாக நாடகமாடி உடலை அவசரம் அவசரமாக அடக்கம் செய்துள்ளனர். போலீசார் சரவணனை கைது செய்து  தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web