கீமோதெரபி சிகிச்சை பெறுகிறேன்... கதறும் பிரிட்டன் இளவரசி!

 
கேட் மிடில்டன்

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக தற்போது தான்   கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பதிவிட்டுள்ளார்.  ஜனவரி மாதம் அவருக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் . அப்போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



42 வயதான அவர், பிரிட்டனின் முடி இளவரசர் வில்லியம்ஸின் மனைவி   ஜனவரி மாதம் மருத்துவமனையில் அவர்  2 வார காலம்  சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் அவர் உறுதி செய்தார்.  “எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியிருந்தது.  இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சையில் இருந்து வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த தகவல் எனக்கும், வில்லியம்ஸுக்கும் அதிர்ச்சி அளித்தது.

கேட் மிடில்டன்
அந்த அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வர நிறைய நாட்கள் எடுத்தது.  அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். தற்போது நான் மிகுந்த நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர  ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். என  கேட் மிடில்டன் தெரிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழுத்தகவல்கள் இதுவரை  வெளியாகவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web