எல்லை பாதுகாப்பு.. தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்த டிரம்ப் முடிவு!

 
டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​சட்டவிரோத குடியேற்றம் பற்றி அதிகம் பேசினார். ஜோ பிடன் நிர்வாகத்தின் போது, ​​டொனால்ட் டிரம்ப், சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை நாடு கடத்துவதாகவும், நாட்டைப் பாதுகாக்க மெக்சிகோவின் எல்லையைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.

டிரம்ப்

இந்நிலையில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாகவும், ராணுவத்தை பயன்படுத்தி ஏராளமான குடியேறிகளை நாடு கடத்துவதாகவும் சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதிலளித்த டிரம்ப், அது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். சுமார் 1.1 கோடி பேர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பின் நாடு கடத்தல் 2 கோடி குடும்பங்களை நேரடியாக பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web