பார்டர் - கவாஸ்கர் போட்டி... பெர்த்தில் ஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி!

 
பார்டர் - கவாஸ்கர் போட்டி... பெர்த்தில் ஆஸிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் பெர்த் மைதானத்தில் நேற்று நடந்த பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டித் தொடரில், நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். வேகத்துக்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முதல் இன்னிங்சில் 49.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்தியா 150 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகளும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கேப்டன் பும்ரா பதிலடி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கவாஜா 8 ரன்களிலும், நாதன் மெக்ஸ்வீனி 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தை கோல்டன் டக் ஆகி வெளியேற்றினார்.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹர்ஷித் ராணா, டிராவிஸ் ஹெட்டை கிளீன் போல்டாக்கினார். சிராஜ் தனது பங்குக்கு மிட்செல் மார்ஷ் மற்றும் லாபுசாக்னே விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதில் மார்னஸ் 52 பந்துகளை சந்தித்து வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் இதுவரை யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களுடன் தடுமாறி வருகிறது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளும், சிராஜ் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். ஆஸ்திரேலியா இன்னும் 83 ரன்கள் பின்தங்கி உள்ளது. இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web