காணாமல் போன மாணவர்கள் கரை ஒதுங்கியது... கதறித் துடித்த நண்பர்கள்!

 
பிரகாஷ் - கவுதம்

மாமல்லபுரத்தில் கடலில் குளித்தபோது காணாமல் போன 2 கல்லூரி மாணவர்களின் உடல்கள் இன்று காலை கரை ஒதுங்கியது. சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கலைக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில், பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் 17 மாணவர்கள், நேற்று 9 பைக்கில் மாமல்லபுரத்துக்கு வந்தனர். பழங்கால சின்னங்கள், கடற்கரை கோவிலை பார்த்தனர். பின்னர் கடற்கரையில் படகில் அமர்ந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மாமல்லபுரம்

பின்னர் மாலையில் ஈசிஆர் சாலையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் இறங்கி குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலையில் மாணவர்கள் அயனாவரத்தை சேர்ந்த ரோஷன் (19), சூளை பிரகாஷ் (19), சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த கவுதம் (19) ஆகியோர் இழுத்து செல்லப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். 

தகவலறிந்து களவாக்கம் தீயணைப்பு நிலைய (பொறுப்பு) ஆனந்தன் தலைமையில் 5 வீரர்கள், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் திருப்போரூர் விரைந்து வந்தனர். படகில் சென்று தேட ஆரம்பித்தனர். அப்போது, ​​ரோஷன் மட்டும் மீட்கப்பட்டார். போலீசார் அவரை மீனவர்கள் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்து பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ரோஷன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவு வரை பிரகாஷ், கவுதம் தேடுதல் வேட்டை நடந்தது.

கடல் நீர் மூழ்கி தண்ணீர்

இந்நிலையில், மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கடற்கரையில் இன்று காலை 2 வாலிபர்களின் சடலங்கள் கரை ஒதுங்குவதாக மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து 2 சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். மாயமான மாணவர்கள் பிரகாஷ் (19), கவுதம் (19) என்பது தெரியவந்தது. பின்னர் உடல்களை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web