பிளடி பெக்கர் படம்... ரஜினி வழியில் நெல்சன் எடுத்த அதிரடி முடிவு!

 
பிளடி பெக்கர்
 


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் நெல்சன் திலிப்குமார் முக்கியமானவர். ரஜினி நடிப்பில் இவர் இயக்கிய ஜெயிலர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், 'பிளடி பெக்கர்' படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தார். 

ப்ளடி பெக்கர்

கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கவின் 'பிச்சைக்காரன்' கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு டார்க் காமெடி கதைக்களத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ப்ளடி பெக்கர்

இந்த படத்தின் தமிழக உரிமையை வாங்கி விநியோகித்த பைவ் ஸ்டார் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட ரூ.7 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் நெல்சன் அந்த நஷ்ட தொகையில் ரூ.5 கோடியை திரும்ப அளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web