பாஜக நிர்வாகி கணவன், மனைவி ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி!

 
தமிழக பாஜக

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி பாஜக நிர்வாகிகளான கணவன், மனைவி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள நிலையில் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திரிபுரா தேர்தல்: எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த பாஜக!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிவக்குமார், அவரது மனைவி சூர்யா மகாலட்சுமி ஆகியோர் கடந்த 5 வருடங்களாக ஏலச்சீட்டும், அதையொட்டி தீபாவளி சீட்டும் நடத்தி வந்தனர். அந்த வகையில் சுமார் 800 பேர் மாதம் ரூ.1,000 செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வந்த நிலையில், கடந்த இரு வருடங்களாக ஏலச்சீட்டு எடுத்தவர்களுக்கு பணம் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பணம் செலுத்தியவர்கள், பலமுறை கேட்டும் செலுத்திய பணம் கிடைக்கவில்லை.

இளம் நடிகர் கைது

இது குறித்து கள்ளக்குறிச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், சூர்யா மகாலட்சுமியை நேற்று முன்தினம் கைது செய்தனர். அதைத்தொடர்ந்து தலைமறை வாக இருந்த அவரது கணவர் சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். கணவன், மனைவி இருவரும் பாஜகவில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகள் வகித்து வந்ததாக கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web