பிரியாணி போட்டி.. வென்றால் 1 லட்சம்.. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மகனுக்காக போட்டியில் கலந்து கொண்ட டிரைவர்!

 
ரயில் பெட்டி ஓட்டல்

கோவை ரயில்வே ஸ்டேஷன் சந்திப்புக்கு வெளியே, ரயில் பெட்டி போல் ஓட்டல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் செம்மனூரில் உள்ள நகைக்கடை உரிமையாளர் பாபி அதை குத்தகைக்கு எடுத்து ஓட்டல் தொடங்கியுள்ளார். கடை விளம்பரத்திற்காக இன்று மதியம் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.1 லட்சமும், நான்கு பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.50 ஆயிரமும், மூன்று பிரியாணி சாப்பிடுவோருக்கு ரூ.25 ஆயிரமும் பரிசு அறிவிக்கப்பட்டது. இதையறிந்த கோவை மற்றும் கேரளாவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.

ரெயில்வே சந்திப்பு சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இது பொதுவாக ஹோட்டலில் வழங்கப்படும் பிரியாணியை விட மூன்று மடங்கு அதிகம் என்றும், இதனால் அதிகம் சாப்பிட முடியவில்லை என்றும் போட்டியாளர்கள் தெரிவித்தனர்.  அதேபோல், சிக்கன் பிரியாணியை கெட்டியான பேஸ்ட்டில் பரிமாறியதால் சாப்பிட முடியவில்லை என்று போட்டியாளர்கள் குற்றம் சாட்டினர்.

போட்டியில் கலந்து கொண்டு தனது குடும்பத்தின் ஏழ்மையை போக்க ஒரு லட்சத்தை வெல்லும் ஆர்வத்தில் இருந்த ஒரு போட்டியாளர் அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட முடியாமல் சோகத்துடன் வெளியேறினார்.15 வயது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மகனின் சிகிச்சைக்காக பிரியாணி போட்டியில் பங்கேற்ற தந்தை ஒருவர் தனது மகனின் உடல்நிலை குறித்து உருக்கமாக பேசினார்.

சின்ன வேடப்பட்டி பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவராக பணிபுரிந்து வரும் இவர், தனது 15 வயது மகனை பள்ளிக்கு அனுப்ப, 19 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டதால், போட்டியில் பங்கேற்றதாக உருக்கமாக பேசினார்.போட்டியை இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் நடத்துவதன் மூலம், புதிதாக திறக்கப்படும் ஹோட்டல், பொது மக்கள் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்பது இந்தப் போட்டியின் வியாபார உத்தி.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web