பிகில் பட கதை விவகாரம்.. இயக்குனர், தயாரிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

 
பிகில்

நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் தனது கதை என்று 2019 ஆம் ஆண்டு அம்ஜத் மீரான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு நிலுவையில் இருந்த நிலையில், கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அனுமதி கோரி 2023ல் அம்ஜத் மீரான் மூன்று மனுக்களை தாக்கல் செய்தார். மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, இயக்குநர் அட்லி, ஏஜிஎஸ் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் தலா ரூ.1 லட்சம் சட்டச் செலவுகளாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடுதல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதித்தனர்.

இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழக்கு செலவுகள் வழங்கப்படாததால், அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனுக்களை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அம்ஜத் மீரான் மீண்டும் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டுக்கான காலக்கெடுவைத் தாண்டி 73 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதால் தாமதத்தை மன்னிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இப்போது இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த காலதாமதத்தை ஏற்று மனுவை விசாரித்த நீதிபதிகள், இயக்குநர் அட்லி மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புகார் மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web